தர்பார் எதிரொலி..! ஓவர் உற்சாகத்தில் ரசிகர்களுக்கு ஹெல்மெட்டை  இலவசமாக வழங்கிய  தீவிர ரசிகர்..! 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படமான தர்பார் இன்று உலகம் முழுவதும் வெளியானது. உலகம் முழுவதிலும் 7000 தியேட்டர்களிலும் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் வெளியானது.

தர்பார் படத்தை ஒட்டி ரஜினி ரசிகர்கள் மிகவும் பிரமாண்டமாக வரவேற்பு தெரிவித்து இருந்தனர். அதன்படி பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்தும் பாலாபிஷேகம் செய்தும் மிகவும் பிரமாண்ட அளவில் தர்பார்  படத்தை வரவேற்றனர். இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக 200க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கி அதிரடி காட்டினர். 

மேலும் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் படத்தில் ரஜினி தோன்றும் காட்சி போலவே காவல்துறை உடை அணிந்து வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது அப்போது மற்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் கிளம்பியது.

தர்பார் படம் பார்தபவர்கள் மிக அருமைதியாக உள்ளது என்றும் ஒரு முறைக்கு பல முறை  படத்தை பார்க்கலாம் என தெரிவித்து உள்ளனர்