வேன் மோதியதில் தீயில் கருகிய இருவர்..!  

தூத்துக்குடியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வசித்து வருபவர் சாமிநாதன். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அவருடைய நெருங்கிய நண்பரான ஒருவரை அழைத்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டம் புறப்பட்டு உள்ளார்.

அப்போது புதுக்குடி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த வேன் எதிர்பாராத விதமாக மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்தின் காரணமாக திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.