வரும் "வியாழன்.. வெள்ளி கிழமை"  மறக்காதீங்க...! இப்படி ஒரு விஷயம் இருக்கு மறக்காதீங்க...! 

செல்வத்தின் அதிபதி என்றால் அது லட்சுமி குபேரர் தான் என்பது ஆன்மீக வாதிகள் மட்டுமின்றி அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம். அதாவது சிவனை நோக்கி தவம் இருந்தவர் லட்சுமி குபேரர்

அதுமட்டுமில்லாமல் வட திசையின் அதிபதி குபேரர் ஆவார். அதாவது திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் திருமணத்திற்கு கடன் கொடுத்தவரும் இவரே என்ற வரலாற்று கதையும் உண்டு. அதன்படி கலியுகம் முடியும் வரை பெருமாள் வாங்கிய கடனுக்கு குபேரனிடம் வட்டி கட்டி வருவதாக நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குபேரரின் அருளைப் பெற வேண்டுமானால் பூரட்டாதி நட்சத்திரம் தேய்பிறை பிரதமை திதி ஆகியவை மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

அவ்வாறு பார்க்கும்போது, குபேரரின் அருள்பெற வரும் வெள்ளிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம் தேய்பிறை பிரதமை திதி ஆகியவை மிகவும் ஏற்ற நாள். வியாழக் கிழமையும் அதாவது பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் இவருக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது இந்த குறிப்பிட்ட இரண்டு நாட்களில் வடக்கு திசை நோக்கி குபேர தீபத்தை ஏற்றி வழிபட்டால் செல்வம் மேன்மேலும் அதிகரிக்கும் என்பது ஐதிகம். அதில் மிகவும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் "ஓம் குபேராய நமஹ" என கூற வேண்டும்.