2 அடி மட்டுமே உயரமுள்ள பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை சக மாணவிகள் தூக்கி சென்று தேர்வு எழுத வைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ளது பழமார்நேரி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்வேதா வெறும் 2 அடி உயரம் கொண்டவர். தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் இவரது வயது 15. ஆனால் உயரமோ மிக மிக குறைவு இவர் அங்குள்ள சின்னராணி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரை தினமும் அவரது அண்ணன் தான் பள்ளிக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்வார். இந்த நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத திருக்காட்டுப்பள்ளி தேர்வு மையத்திற்கு ஸ்வேதாவை சக மாணவிகளை தூக்கி சென்று வந்துள்ளனர்.

அதேபோன்று, பின்னர் பரிட்சை முடிந்ததும் அவரை தூக்கி சென்று அவரது வீட்டில் விட்டுள்ளனர். இந்த சம்பவம் தேர்வு எழுத வந்த சக மாணவ மாணவிகளை நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.