அப்படிப்போடு..! இந்த 2 வழிகள் மட்டும் தெரிஞ்சிக்கோங்க.... அசால்ட்டா  கொரோனாவை தட்டி தூக்கிடலாம்...!

இத்தாலியில் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அது என்ன  தெரியுமா..? தினந்தோறும் இத்தாலியில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை மட்டுமே நமக்கு தெரிந்த  இந்த ஒரு தருணத்தில் அதே இத்தாலியின் வெனிஸ் நகரத்திலிருந்து 70 கிமீ தூரத்தில் உள்ள சிறு நகரம் வோ -வில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி இத்தாலியின் முதல் கொரோனா தொற்று வோ-வில் வசித்த நபருக்கு உறுதி செய்யப்பட்டபின் நடந்த விஷயம் அனைவருக்கும் நம்பிக்கையை கொடுக்கும் வகையில் உள்ளது

தற்போது இத்தாலியில் உயிரிழப்பு 7000 த்தை தாண்டியுள்ள நிலையில்,வோ நகரில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றால் எவ்வளவு பெரிய நிம்மதி கொடுக்கும் செய்தியாக இதனை பார்க்க முடிகிறது அல்லவா? தற்போது இந்த பகுதியில் எந்த ஒரு உயிரிழப்பும் இல்லை. புதிய பாதிப்பும் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற இனிமையான தகவல் வெளியாகி உள்ளது 

இது எப்படி சாத்தியம் தெரியுமா ?

இங்கு வசிக்கும் வோ நகர வாசிகள் இரு காரணங்களை சொல்கின்றனர்.அதில் ஒன்று தனிமைப்படுத்துவது. இரண்டாவது எல்லோரையும் பரிசோதனை செய்வது அவ்வளவு தான். அதாவது பிப்ரவரி 21-ஆம் தேதி தங்கள் நகரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தபின், அடுத்த 2 தினங்களில் நகரத்தை முற்றிலுமாக மூடினர். 3000 குடும்பங்கள் வசித்து வந்த இந்த நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை  நடத்தப்பட்டு 3 சதவீதம் பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரையும்  தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் லேசான அறிகுறிகளுடன் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தோற்று இல்லாதவர்களையும் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர். மக்களும் அதனை கடைபிடித்து வந்துள்ளனர் 

இதனை தொடர்ந்து மார்ச் 6 மற்றும் 8 ஆம் தேதிகளில் மீண்டும் சோதனை செய்த போது ஒரே ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் கடைசியாக மார்ச் 23 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் புதிய தொற்றும் இல்லை... உயிரிழப்ய்களும் இல்லை... சிகிச்சை பெற்றவர்களும்  முழுமையாக குணமடைந்து உள்ளனர். இத்தாலியில் இந்த ஒரு நகரில் மட்டும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வந்ததால், அவர்களை மிக சிறப்பான முறையில் கவனித்துக்கொண்டு உள்ளனர். கொரோனாவை  மிக எளிதாக வென்று உள்ளனர்