சென்னையில் மட்டும் 18 இடங்களின் பெயர்கள் விரைவில் மாற்றம்..! எந்தெந்த இடங்களின் பெயர்கள் தெரியுமா..?

சென்னை மாவட்ட ஆணையர் தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் சென்னையில் மட்டும் 18 ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது வரை, பேட்டை பகுதிகளான சிந்தாரிப்பேட்டை தண்டையார்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பேர்களின் முடிவில் உள்ள பேட்டையை, ஆங்கிலத்தில் "பெட்" என இருக்கும். ஆனால், தற்போது அதை தமிழில் பேட்டை என்று உள்ளவாறே ஆங்கிலத்திலும் பேட்டை என்றே எழுத உள்ளது.

இதே போன்று, சென்னைய அயானவரத்தை - அயன்புரம் என்றும், டி நகரை தியாகராஜ நகர் என்றும், எக்மோரை எழும்பூர் என்றும், ட்ரிப்லக்கேன் என்பதை திருவல்லிக்கேணி என்றும் இனி தமிழிலேயே மாற்றப்பட உள்ளது. ஆங்கிலேயர் வாழ்ந்த இடங்களில் அவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக, அவர்களின் பெயர்களையே ஊர்களின் பெயராகவும், தெருக்களின் பெயராகவும் வைத்து உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் மட்டும் 18 இடங்களிலும், தமிழகம் முழுவதும் உள்ள 33 மாவட்டங்களில் மாநிலத்தில் உள்ள பல பெயர்களை தமிழில் மாற்றப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது.