ஒரே நாளில் 1553 பேருக்கு கொரோனா தொற்று..! 36 பேர் பலி.. ஊரடங்கில்.. வீட்டில் அடங்குங்கள் மக்களே..! 

இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் குறைய மத்திய மாநில அரசுகள்  பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் தற்போது வரை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த ஒரு நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 36 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிபோடத்தக்கது. அதே வேளையில் மக்கள் அதிகம் வாழும் ஆசியாவின் மிக பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மேலும் கேரளாம், ஒடிசா மாநிலத்தில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

ஊரடங்கு உத்தரவு 

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊரடங்கு எவ்வாறு  அமல்படுத்தப்படுகிறது என தீவிரமாக கண்காணிக்கப்பட்டு  வருகிறது என்றும் மத்திய உள்துறை  அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் நாடு முழுவதும் 14.7 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 7  நாளில்  மட்டும் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து  உள்ளது என்றும், முன்னதாக கொரோனா பரவல் வேகம் 3 நாட்களாக இருந்த நிலையில், தற்போது 7 நாட்களாக உள்ளது. அதன் படி பார்த்தல் கொரோனா பரவல் வேகம் குறைந்து உள்ளது 

கோவாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம்  தெரிவித்து  உள்ளது. 

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கொரோனா டெஸ்ட் கிட்டுகள் திருப்தி அளிப்பதாக உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது.