துணிச்சலாக வீடியோ எடுத்த 15 வயது வீராங்கனை...! சில்மிஷம் செய்த பயிற்சியாளரை எப்படி சிக்க வைத்துள்ளார் பாருங்க..! 

பயிற்சியாளரே தன்னிடம் பயிற்சி பெற்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா நீச்சல் அணியின் பயிற்சியாளராக சுராஜித் கங்குலி என்பவர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவரிடம் பயிற்சி பெற்று வந்த தேசிய அளவில் பதக்கம் வென்ற 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள அவ்வப்போது முயற்சி செய்து வந்துள்ளார்.

இதனை எப்படி கையாள வேண்டும் என  சிந்தித்த அந்த சிறுமி, பயிற்சியாளர் வருவதை உணர்ந்து தன் மொபைல் போனில் கேமரா ஆன்  செய்து அதனை ஒரு ஓரத்தில் வைத்து விடுகிறார். எதிர்பார்த்தவாறே அன்றும்  பயிற்சியாளர் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததால் அந்த காட்சி முழுவதும் அப்படியே வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ  தற்போது இணையத்தில் வைரலாக பரவி பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இந்த வீடியோ விவகாரம் உடனடியாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கோவா நீச்சல் அணியின் பயிற்சியாளர்  சுராஜித் கங்குலியை பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்..இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால் பயிற்சியாளர் சுராஜித் கங்குலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள சுராஜித்தை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

பொதுவாக இதுபோன்ற சம்பவங்களில் சிக்கும் பெண்கள் சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுப்பதும் கூட செய்திகளில் பார்க்க முடியும். ஆனால் 15 வயதே ஆன இந்த சிறுமியின் சாதுர்த்திய செயலால் தவறு செய்த பயிற்சியாளரின் முகத்திரையை கிழித்து தொங்க விட்டு உள்ளார். இந்த சிறுமியின் தைரியமும் மிகவும் சாதுர்த்தியமாக நடந்து கொண்ட திறமையையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இருந்தபோதிலும் இதுபோன்று நடக்கும் சம்பவங்களால் பொதுமக்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பு கருத்துக்களையும், மன குமுறல்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.