புத்தாண்டு கொண்டாட பிளான் பண்ணிட்டீங்களா...? அதிரடி ரூல்ஸ் போட்ட காவலர்கள்..! 

2020 புத்தாண்டு நாளை மறுதினம் புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு இருக்க பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் இரவு ஒருமணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.புத்தாண்டு தினத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி பிடிபடுவார்கள் தடையில்லா சான்றிதழ் பெற பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல் 

மேலும் புத்தாண்டு தினத்தையொட்டி 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தேவாலயம், வழிபாட்டுத்தலங்கள், கோவில்களில் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அன்றைய தினத்தில் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மீறினால் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரத்தில் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கும் பொருட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் தடையில்லா சான்று பெற மிகவும் சிரமத்திற்கு ஆளாக படுவார்கள் என்றும் அவர்கள் மீது குற்ற வழக்கு பதியப்பட்டு வெளிநாடுகள் செல்ல தேவையான பாஸ்போர்ட் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. நாளை இரவு முதல் போக்குவரத்து மாற்றம் தொடங்கும் என்றும் குறிப்பாக காமராஜ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வாகனம் நிறுத்துவதற்கு பல்வேறு இடங்களை ஒதுக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது

மேலும் சென்னையில் 368 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்பட உள்ளது. மயிலாப்பூர் திருவல்லிக்கேணி அம்பத்தூர் உள்ளிட்ட 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.  கடலில் மூழ்கி உயிர் இழப்பை தடுக்க குதிரைப் படைகளும் தயார்நிலையில் உள்ளன.

எனவே வரும் புத்தாண்டை எந்த வித பிரச்னையும் இல்லாமல் சிறப்பாக வரவேற்பதில் மக்கள் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்