பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி காலை 9 .30   மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவ-மாணவிகள் விடுமுறை நாட்களை ஜாலியாக கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக நடந்து முடிந்த தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்தது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி காலை 9 .30 மணிக்கு  வெளியாக உள்ளது அதன்படி http://www.tnresults.nic.in , http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in என்ற இணையதள பக்கத்தின் மூலம் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேவையான பதினெட்டாம் தேதி அடுத்த நாளே தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது