12 ராசியினரில் இன்று பெரும்பாடு படுபவர்கள் யார் தெரியுமா..?

மேஷம் ராசி நேயர்களே...!

சில விஷயங்களில் திட்டமிட்டபடி வேலைகளை செய்ய முடியாது. உங்களுக்கு துரோகம் செய்த சில நபர்களை பற்றி நினைத்து வருத்தப்படுவீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

ரிஷப ராசி நேயர்களே...!

பொதுவான சில காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கடக ராசி நேயர்களே..!

அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். ஆடம்பர செலவுகளை சேமிக்க கற்றுக் கொள்வீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

கடந்த காலத்தில் நடந்த பல இனிமையான சம்பவங்களை நினைத்து மகிழ்வீர்கள். அரசு அதிகாரிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

கன்னி ராசி நேயர்களே..!

கொடுத்த சவாலில் வெற்றி பெறும் நாள் இது. அரசால் ஆதாயம் கிடைக்கும். பிரபலங்களின் நட்பு உங்களுக்கு எளிதாக கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். அழகு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

ஒரே நேரத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய கூடிய நிலை ஏற்படும். உறவினர்கள் விஷயத்தில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். பழைய நண்பரை சந்தித்து சந்தோஷமாக இருப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

பழைய பிரச்சினைகள் அடிக்கடி நினைவுக்கு வரும். நண்பர்களுடன் ஆலோசனை செய்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மகர ராசி நேயர்களே...!   

பிரச்சினைகளை நினைத்து வேதனைப்பட வேண்டாம். பயணம் புத்துணர்ச்சியை அளிக்கும். மற்றவருக்காக பொறுப்புகளை ஏற்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே..!

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள் இது. உறவினர்கள் நண்பர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். நம்பிக்கையான நபரை உங்களுடன் வைத்துக் கொள்வது நல்லது.

மீனராசி நேயர்களே...! 

விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.