12 வயது சிறுமி 3 மாத கர்ப்பம் ..! திருப்பூரில் அடுத்த பரபரப்பு..! 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுமி கடந்த சில நாட்களாக வயிற்றுவலி என தெரிவித்து வந்த நிலையில், அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவி, இவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலி என தெரிவித்து வந்துள்ளார். இதனால் பெற்றோர்கள் வயிற்று வலிக்கு தேவையான சில மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் வயிற்று வலி சரியாகத காரணத்தினால் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர் பெற்றோர்கள்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சிறுமி சிகிச்சை பெற்று வருவதால் அடுத்த கட்ட சிகிச்சைக்கு என்ன என்பது சட்டபூர்வமாக முடிவு எடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பெற்றோர்கள் மற்றும் அந்த சிறுமி மருத்துவமனையில் இருப்பதால் அவர்களிடம் விசாரணை மேற் கொள்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து சிறுமி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபர் யார் என்பதை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.