பிரியாணி சாப்பிட... சென்னை to வாணியம்பாடி சைக்கிளில் பயணம் செய்த இளசுகள்..! 450 கிலோ மீட்டர் வரை இழுத்த பிரியாணி ருசி..! 

பிரியாணி சாப்பிட சென்னையிலிருந்து வாணியாம்பாடி வரை 450 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்களை ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர் பொதுமக்கள்;

ஆம்பூர், வாணியம்பாடி என்றாலே பிரியாணி தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பிரபலம் அடைந்த ஓர் இடம் என்றால் அது ஆம்பூர், வாணியம்பாடி என்றே கூறலாம்.

என்னதான் அசைவ உணவுகள் ருசியாக செய்தாலும் ஆம்பூர்,வாணியம்பாடி பிரியாணிக்கு என்று தனி ருசி உண்டு. இதனை மட்டும் யாரும் மறுக்கவே முடியாது. அப்படி ஒரு பிரியாணியை சாப்பிட்டே ஆக வேண்டும் என முடிவு செய்த நண்பர்கள் கூட்டம் சென்னையில் இருந்து 12 பேர் அடங்கிய குழுவினர் சைக்கிளில் ஆம்பூர் வரை பயணம் செய்து உள்ளனர்.

அதாவது டபிள்யு.சி.சி.ஜி என்ற அமைப்பை சேர்ந்த 12 நபர்கள் சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் பயணம் செய்து வாணியம்பாடி வந்துள்ளனர். பிரியாணி சாப்பிடுவதற்காகவே சைக்கிளில் 450 கிலோ மீட்டர் பயணம் செய்த இவர்களை அவ்வூர் மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.