Asianet News TamilAsianet News Tamil

அடி தூள்..! ஒன்றல்ல இரண்டல்ல...12 வயதில் 26 மொழி பேசி அசத்தும் நம்ம சென்னை சிறுவனடா..!

படிப்பது வேறு.. கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் அறிந்துக் கொள்வது வேறு என நிரூபணம் செய்துள்ளார் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெறும் 12வயதே ஆன சிறுவன்.

12 yes old chennai based studentspeaks 26 languages and  he rocks the world
Author
Chennai, First Published Feb 4, 2019, 1:26 PM IST

படிப்பது வேறு.. கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் அறிந்துக் கொள்வது வேறு என நிரூபணம் செய்துள்ளார் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெறும் 12 வயதே ஆன  சிறுவன்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை வியாசர்பாடியை சேர்ந்த,12 வயது அக்ரம் என்ற மாணவர் 26 மொழிகளில் பேசி அனைவரையும் அதிசயக்க வைத்து உள்ளார். இது குறித்து பேசிய அக்ரம், "எனக்கு 4  வயதாகும் போது பேசுவதிலும் சரி, வேறு மொழியில் உரையாடுவதும் சரி எனக்கு மிகவும் பிடிக்கும். ஆன்லைனில் கூட பல மொழிகளை கற்றேன்.இதனை அறிந்த எனது அப்பா, பல மொழிகளை கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். இதுவரை 25 கும் மேற்பட்ட நாடுகள் சென்று வந்துள்ளேன். இன்னும் சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சி எனக்கு 148 வது நீகழ்ச்சி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்" என அனைவரின் முன் பேசினார்.

12 yes old chennai based studentspeaks 26 languages and  he rocks the world

மேலும் பேசிய சாதனை மாணவர் அக்ரம், சாக்லேட், ஐஸ்கிரீம், ஜங்க்புட்  இவற்றை எல்லாம் எடுத்துக்கொள்ள மாட்டேன். அதற்கு பதிலாக சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானிய உணவு வகைகளை தான் சாப்பிடுவேன் என தெரிவித்து உள்ளார்.

மேலும் இன்றைய மாணவர்களுக்கு அக்ரம் கூறிய அறிவுரை என்னவென்றால், ஆங்கிலம், இந்தி, உருது, அரபி, சைனீஸ், பிரெஞ்ச் ஆகிய 5 மொழி தெரிந்தால் போதும், இந்த உலகத்தையே ஆளலாம் என உற்சாகமாக பேசி மற்றவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios