12 ராசியில் எந்த ராசியினருக்கு இன்று அதிர்ஷ்டம் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..! 

தைரியத்தோடு செயல்பட்டு புதிய சாதனை படைக்கும் நாள். உங்கள் நண்பர்கள் தக்க சமயத்தில் வந்து உதவி செய்வார்கள். உங்கள் மனதிற்கு ஏற்ற ஒரு நல்ல செய்தி வந்தடையும்.

ரிஷப ராசி நேயர்களே...!

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் அதிகரிக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி காரியங்களை செய்து காட்டுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

எடுத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நாள் இது. உங்களுடைய எதிர்காலம் இனிமையாக அமையும். அரசு வகையில் உங்களுக்கு ஆதாயம் கொண்டு. உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

கடக ராசி நேயர்களே...!

சுப செலவு ஏற்பட கூடிய நிலை வரும். சுற்றியிருப்பவர்கள் சிலர் தொல்லை தருவார்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் வரும்.

சிம்ம ராசி நேயர்களே...!

உங்களுடைய லாபம் இருமடங்காக உயரும். தன்னம்பிக்கையோடு எதையும் செய்து காட்டுகிறார்கள். உத்தியோகத்தில் உங்களது திறமை வெளிப்படும். பொன் பொருள் வாங்க திட்டமிடுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

தொட்ட காரியம் நல்லபடி நடக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஓர் நல்ல முடிவை எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சில பிரச்சினை முடிவுக்கு வரும்.

துலாம் ராசி நேயர்களே..!

வருமானம் வரும் வழியை தெரிந்து கொள்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக உங்களை வந்தடையும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் நாள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு மிகவும் யோகமான நாள். உங்கள் மனதிற்கு ஏற்ற சில காரியங்கள் நடைபெறும். நல்ல விஷயம் உங்களை தேடி வரும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். உடல் அக்கறை தேவை.
 உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

பயணத்தால் நல்ல பலன் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எந்த ஒரு முக்கிய முடிவையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது.

மகர ராசி நேயர்களே...!

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. நீங்கள் செய்யும் வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். சமூக நல பணிகளில் நாட்டம் உங்களுக்கு அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே..!

பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய மிக முக்கியமான நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். உங்களைப் பற்றி சிறப்பாக பேசுவார்கள்.

மீனராசி நேயர்களே...!

கோவில் வழிபாட்டால் உங்களுக்கு நன்மை நடக்கும். புது முயற்சியில் வெற்றி கிட்டும். பிறருக்கு உதவி செய்யும் மனம் உடைய நீங்கள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர்.