12 ராசியில் இன்று ஓவரா ஆட்டம் போடும் ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கக் நேரிடும். பேச்சில் நிதானம் தேவை. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலைகள் தற்போது முடிவு பெறும்.

 ரிஷப ராசி நேயர்களே...!

ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொண்டு உங்களை நாடி வருவார்கள். சகோதரியின் பாசம் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

மனக்குழப்பங்கள் நீங்கி விடும். விருந்தினர் வருகையால் வீடு சந்தோஷமாக இருக்கும். பழைய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகராசி நேயர்களே...!

உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்தடையும். சகோதரி வகையில் ஆதரவு கிடைக்கும். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

தாழ்வுமனப்பான்மை அவ்வப்போது வந்து நீக்கம். பணம் நகையை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். நிதானமாக செயல்படுவது நல்லது.  திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கன்னி ராசி நேயர்களே..!

உங்களுடைய மன பலம் அதிகரிக்கும். கடனாக கேட்ட இடத்தில் இருந்து பணம் வந்து அடையும். வீடு வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

பழைய வீட்டை விற்று புது வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உங்களுக்கு உதவி கிடைக்கும். பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

சிலர் வீடு மாற திட்டமிடுவீர்கள். உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள்.

தனுசு ராசி நேயர்களே..!

பூர்வீகச் சொத்தை விற்க முற்படுவீர்கள்.  தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே...!

தாயாரின் உடல் நிலையில் அக்கறை தேவை. விலகி இருந்த உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வார்கள்.

கும்ப ராசி நேயர்களே....!

புதிய சொத்து வாங்க நேரிடலாம். பணப்புழக்கம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சாமர்த்தியமாக பேசி எந்த காரியத்தையும் மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

மீன ராசி நேயர்களே...!

வீண் சந்தேகம், தாழ்வு மனப்பான்மை அவ்வப்போது வந்து நீங்கும், யாருக்காகவும் முன் நின்று உதவ செல்லாதீர்கள், அனாவசியமாக யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்,