12 ராசியினர் கவனத்திற்கு! மகாசிவராத்திரி- எந்த ராசியினர் எந்த பொருளை கொண்டு  அபிஷேகம் செய்ய வேண்டும் தெரியுமா? 

நாளை மகா சிவராத்திரி என்பதால் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் விரதம், இருப்பதனால் ஏற்படக்கூடிய நற்பலன்கள் என்ன என்பதை இதற்கு முன்னதாக பதிவில் பார்த்தோம்.

தொடர்ச்சியாக தற்போது 12 ராசியினரும் நாளைய தினத்தில் எந்த பொருளைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அந்த வகையில்..

மேஷ ராசி நேயர்களே..!

வெல்லம் கலந்த நீர் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

ரிஷப ராசி நேயர்களே...!

தயிர் கொண்டு அபிஷேகம் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை எளிமையாக இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

கரும்பு சாறு கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை இனிப்பாக இருக்கும்.

கடகராசி நேயர்களே...!

சர்க்கரை சேர்ந்த பால் கொண்டு அபிஷேகம் செய்தால் மிகவும் நல்லது. மேலும் மந்தாரை பூ கொண்டு அர்ச்சனை செய்தால் வாழ்வில் மென்மேலும் முன்னேற்றம் அடைவீர்கள்

சிம்ம ராசி நேயர்கள்-  பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

கன்னி ராசி நேயர்களே..!

பால் அல்லது நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்

துலாம் ராசி நேயர்களே..!

பசும்பால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

விருச்சக ராசி நேயர்களே..!

தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம்.

தனுசு ராசி நேயர்கள்...!

குங்குமப்பூ கலந்த பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

மகர ராசி நேயர்களே..! 

சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழம் வைத்து படைத்தால் நல்லது. 

கும்ப ராசி நேயர்களே..!

இளநீர் அல்லது கடுகு எண்ணெயை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து வந்தால் மிகவும் நல்லது.

மீனராசி நேயர்களே...!

குங்குமப்பூ பால் கொண்டு  சிவனுக்கு அபிஷேகம் செய்து வந்தால் நினைத்தது நிறைவேறும்.