12 ராசியினரில் ஆடம்பர பொருட்களை  வாங்கும் எண்ணம் யாருக்கு வரும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

உங்களது பொருளாதார நிலை நாளுக்கு நாள் உயரும். சகோதரர் உதவி செய்வார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கி மகிழ்ச்சி நிலவும்.

ரிஷப ராசி நேயர்களே...!

இன்று நீங்கள் பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பல புதிய முயற்சிகள் மூலம் தொழில் வளர்ச்சி அடையும்.

மிதுன ராசி நேயர்களே...! 

பெற்றோர் வழியில் உங்களுக்கு அதிக பிரியம் ஏற்படும். நண்பர்கள் நல்ல தகவலை தருவார்கள் வாகனத்தை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில்  மன அழுத்தம் ஏற்பட்டு அகலும்.

கடக ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு திறமையை வெளிப்படுத்தும் நாள். மருத்துவ செலவு மெல்ல மெல்ல குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். எடுத்த முயற்சி கைகூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி பண வரவை அதிகரிக்கும். தொலைதூரப் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே...!

கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். நினைத்த காரியம் நடக்கும். உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தொழில் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம்.

துலாம் ராசி நேயர்களே...!

உத்தியோக முன்னேற்றம் கருதி ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்லுங்கள். பக்குவமாக பேசி பாராட்டுகளைப் பெறும் நாள்.

விருச்சிக ராசி நேயர்களே..!

சொன்ன சொல்லை  செயலாக்கிக் காட்டும் நாள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை தரும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் யோகம் அதிகரிக்கும்.பண வரவு திருப்தியாக இருக்கும்

மகர ராசி நேயர்களே..!

காலையில சலசலப்பு.. மாலையில் கலகலப்பும் ஏற்படும். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துகிறீர்கள்.

கும்ப ராசி நேயர்களே....!

வரவு திருப்தியாக இருக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை சந்தித்து பேசுவார்கள். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சியான செய்தி வரும். 

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எந்த தலைவரும் வர வேண்டாம்! 1 வயது குழந்தை மட்டும் வந்தால் போதும்..! கெஜ்ரிவால் அதிரடி

மீனராசி நேயர்களே...! 

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து பேசுவார்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். கோபமாக பேசிவிட்டு பிறகு வருத்தம் அடைவீர்கள். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது