12 ராசியினரில் லக்கியான ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

எதிலும் முன்னேற்றம் ஏற்படக் கூடிய நாள் இது. தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் கேட்பார்கள். கேட்ட இடத்திலிருந்து உங்களுக்கு பணம் வந்து சேரும்.

மிதுன ராசி நேயர்களே...!

தாயாருடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்வது நல்லது. மின்சார சாதனங்களை வாங்க கூடிய நிலை ஏற்படும்.

கடக ராசி நேயர்களே...!

சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்பட வேண்டாம். எதிர்பார்த்த பணம் உங்களை வந்தடையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மராசி நேயர்களே...!

தொட்ட காரியங்கள் எளிதாக தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் மறைந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.புதிய வாகனம் வாங்குவது குறித்து திட்டமிடுவீர்கள். வீடு கட்டுவதற்கான வேலைகளில் இறங்குவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களின் ஆளுமைத்திறன் நாளுக்கு நாள் அதிகரிக்கும். சவாலான சில காரியங்களில் இறங்கி எளிதாக வெற்றி அடைவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் திடீரென உங்கள் வீட்டிற்கு வருகை புரிவார்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

தந்தை வழியில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். எதிர்பார்த்த பணம் உங்களை வந்தடையும்.

விருச்சக ராசி நேயர்களே..!

வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மகிழ்ச்சி அதிகரிக்கும். சில பிரச்சனைகள் அவ்வப்போது வந்து நீங்கும். மனம் தளரவேண்டாம்.

தனுசு ராசி நேயர்களே...!

மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும். கல்யாண பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனத்தை வாங்க திட்டமிடுவீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

மனைவிவழி உறவினர்களால் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் நல்ல செய்தி வந்தடையும். உங்களது பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விலகி இருந்த பழைய நண்பர்கள் தேடி வந்து உங்களிடம் பேசுவார்கள். உறவினர்கள் மூலம் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

மீனராசி நேயர்களே...!

ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும். எதிர்காலத்தை ஓரளவிற்கு உணரும் சக்தி உங்களுக்கு பிறக்கும். மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடிவரும். உங்களுடைய மதிப்பு வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும்.