12 ராசியினரில் இன்று எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கலாம். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் குறித்த கவலை வந்து போகும்.

ரிஷப ராசி நேயர்களே...!

குடும்பத்தில் அனைத்து வேலைகளையும் நீங்களே பார்த்துக் கொள்ளும் சூழல் உருவாகும். எந்த காரியத்தையும் நிதானமாக செயல்படுவது நல்லது.

மிதுன ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்தடையும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

கடக ராசி நேயர்களே..!

திறமையாக செயல்பட்டு பல காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். மனக்குழப்பங்கள் இருக்கலாம். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். இதன் காரணமாக அலைச்சல் உண்டாகும்.

சிம்ம ராசி நேயர்களே...!

பணவரவு அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு மரியாதை கூடும். தேவையில்லாத மன குழப்பம் உண்டாகலாம். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

கன்னி ராசி நேயர்களே...!

வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். குடும்பத்தினருடன் கலந்து பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே..!

எதிர்காலத்துக்கான பல முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. ஆன்மீக நாட்டமும் உங்களுக்கு அதிகரிக்கும். உங்களுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைய கூடிய நேரம் வரும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

தனுசு ராசி நேயர்களே..! 

வேலைச்சுமையால் அதிக சோர்வு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுநாள் வரை இருந்துவந்த பிரச்சினை நீங்கும். சில விஷயங்கள் பொறுமையாக நடக்கும். அவசரப்படவேண்டாம்.

மகர ராசி நேயர்களே...!

வாகனம் வாங்குவதிலும் விற்பதிலும் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். பணம் நகை வாங்கித் தருவதில் சிக்கல் ஏற்படலாம். சுப செலவுகளும் அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே..!

குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்டகாலமாக இழுத்தடித்து வந்த வேலை மிக எளிதாக முடிந்து விடும். பல பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு ஏற்படும். 

மீன ராசி நேயர்களே..! 

மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஈர்க்கும் திறன் கொண்டவர்கள் நீங்கள். பண வரவு அதிகரிக்கும். பேச்சில் மிகவும் பொறுமை தேவை.