12 ராசியில் எந்தெந்த ராசியினருக்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

கடின உழைப்பால் சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். வாழ்க்கையில் அமைதி ஏற்படும். தடைபட்ட சில வேலைகள் விரைவில் நடந்து முடியும்.

ரிஷப ராசி நேயர்களே..!

பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். எதிர்ப்புகள் அகலும். முகப்பொலிவு ஆரோக்கியம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உண்டு. கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி நேயர்களே..! 

செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகும்.திடீர் பயணங்கள் ஏற்படலாம். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளித்து காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு உதவி செய்ய வருவார்கள்.

கடக ராசி நேயர்களே..!

வீடு வாகனம் வாங்குவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். பழைய நகைகளை விற்று புதிய நகைகள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களைத் தேடிவந்து உதவி செய்வார்கள்.

சிம்ம ராசி நேயர்களே....!

ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டிய நாள் இது. சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். ஒரு சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி கன்னி ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. தாயாரின் உடல்நலத்தில் ஆரோக்கியம் தேவை. மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் இருக்கும். கனிவான பேச்சால் பல காரியங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

விருச்சக ராசி நேயர்களே...!

புதியவர்கள் அறிமுகமாவார்கள். வரவேண்டிய பணம் விரைவில் வந்தடையும். வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

குடும்பத்தில் அமைதி உண்டாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் கேட்டுக்கொள்வார்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

வேலை சுமை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது.

கும்ப ராசி நேயர்களே..!

அத்தியாவசிய செலவுகள் ஏற்படலாம். சில பிரச்சினைகளுக்கு மிக அரிதாக தீர்வு காண்பீர்கள்.

மீனராசி நேயர்களே...!

வருமானம் உயரும்... வருங்கால திட்டங்களில் ஒன்று  நிறைவேறும். சொந்த ஊரில் மதிப்பு அதிகரிக்கும்