12 ராசியினரில் பலருடைய அன்பை பெரும் வாய்ப்பு யாருக்கு உண்டு தெரியுமா..?  

மேஷ ராசி நேயர்களே...!

இன்று சிவ ஆலய வழிபாட்டால் நன்மை நடக்கும். செல்வ நிலை உயரும். தைரியத்தோடு செயல்பட்டு பல சாதனைகள் செய்வீர்கள். நந்தி வழிபாடு மிகவும் நல்லது. 

ரிஷப  ராசி நேயர்களே..! 

உறவினர் வழியில் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய வரலாம்.  

மிதுன ராசி நேயர்களே...!

ஆலய ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பக்குவமாக பேசி சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

சுபச்செலவுகள் ஏற்படும் நாள். சுற்றி இருப்பவர்களால் ஒரு சில தொல்லைகளை சந்திக்க நேரிடும். அரசியலில் அதிக ஈடுபாடு அதிகரிக்கும் .ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்மராசி நேயர்களே..!

தெய்வ தரிசனத்தால் மகிழ்ச்சி காண்பீர்கள். திடீர் தனவரவு ஏற்படும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். தடைகள் அகல வழி பிறக்கும். பயணங்கள் உங்களுக்கு நன்மை கொடுக்கும்.

கன்னி ராசி நேயர்களே..!

தொட்ட காரியம் நன்றாக முடியும். தொல்லை தந்தவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பயன் தரும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

வருமானம் வரும் வழியை தெரிந்துகொள்ளும் நாள். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

விருச்சக ராசி நேயர்களே...!

பெருமை வந்து சேரும். நண்பர்கள் வீடு தேடி வந்து உங்களிடம் பேசுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். வருமானம் திருப்தியாக இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

எதிர்பாராத லாபம் கிடைக்கும். எந்த முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுதும்  குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து உங்களிடம் பேசுவார்கள்.

மகர ராசி நேயர்களே...!

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் அகலும். நாட்டம் அதிகரிக்கும், திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கும்ப ராசி நேயர்களே..!

பிள்ளைகளை வளர்ச்சியை கண்டு பெருமை அடைவீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மீனராசி நேயர்களே..!

கோவில் வழிபட்டால் சகல கவனமாக இருப்பீர்கள். புது முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பை பெறுவீர்கள்.