12 ராசியினரில் வீட்டு மனை வாங்கக்கூடிய வாய்ப்பு யாருக்கு உண்டு தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

வரன் வீடு தேடி வரும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். சுபகாரிய பேச்சுகள் நடக்கும்.

ரிஷப ராசி நேயர்களே..!

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி அடையும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

பொருளாதார முன்னேற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். வழிபாட்டு தலங்களுக்கு சென்று மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகராசி நேயர்களே...!

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். விரதம் வழிபாடுகளில் ஆர்வம் ஏற்படும். இடம், மனை, வீடு வாங்க வாய்ப்பு தேடிவரும்.

சிம்ம ராசி நேயர்களே..!

தனவரவு தாராளமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான முக்கிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசியலில் ஈடுபாடு ஏற்படலாம். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி அடையும்.

கன்னி ராசி நேயர்களே! 

போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காக அமையும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நேற்றைய பிரச்சினை ஒன்று நல்ல முடிவிற்கு வரும்.

துலாம் ராசி நேயர்களே...!

தொலைபேசி மூலமாக ஒரு நல்ல செய்தி வரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள செலவிட நேரிடும். மாற்று இனத்தவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே..!

விஐபி- க்களை சந்தித்து மகிழக்கூடிய நாள். இடம் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலை உயரும். நண்பர்களை நல்ல தகவல் உங்களை வந்தடையும்.

தனுசு ராசி நேயர்களே...!

மகிழ்ச்சி அதிகரிக்கும். புகழ்பெற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும்.

மகர ராசி நேயர்களே...!

வருமானம் இரு மடங்காக அதிகரிக்கும். வழிபாடுகளில் சிந்தனை செலுத்துவீர்கள். முன்னோர் சொத்துக்கள் மூலம் முறையான லாபம் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை ஏற்படும்.

கும்ப ராசி நேயர்களே...! 

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து பார்ப்பார்கள்.உற்ற நண்பர் ஒருவர் தக்க சமயத்தில் உதவி செய்வார்.

மீன ராசி நேயர்களே..!

தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். காலையில் செய்ய மறந்த வேலைகளை மாலையில் செய்து முடிப்பீர்கள்.