12 ராசியினரில் யாருக்கு தொலைபேசி வழி நல்ல தகவல் கிடைக்கும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ரிஷப ராசி நேயர்களே...!

தேவைகளை பூர்த்தி செய்ய தெய்வீக வழிபாடு தேவை. நிதானத்தைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி அடைவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.இன்று மறதியாக காணப்படுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து உங்கள் முன் நிற்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் தேவை.

கடக ராசி நேயர்களே..!

அன்பு நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். ஆதாயம் உங்களுக்கு உண்டு. வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கக்கூடும். உடன்பிறப்புகள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

சிம்மராசி நேயர்களே...!

தனவரவு அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமை அடைவீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே..!

போன் மூலம் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக நடக்கும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினை ஒன்று நல்ல முடிவுக்கு வரும்.

துலாம் ராசி நேயர்களே...!

அலைபேசி மூலம் அனுகூலமான செய்திகள் வந்து சேரும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு வழி செய்வார்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

உங்களுக்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை உங்களுக்கு கொடுப்பார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு லாபகரமான நாளாக அமையும். பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வருமானம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைக்கும். சொத்துக்கள் வாங்க வழிவகை பிறக்கும்.

மகர ராசி நேயர்களே...!

சொத்துக்கள் மூலமாக லாபம் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பராசி நேயர்களே...!

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து உங்களிடம் பேசுவார்கள். பக்கத்து வீட்டாருடன் ஓரளவுக்கு பேசி பழகுவது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும் செலவும் அதிகரிக்கும்.

மீனராசி நேயர்களே...!

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தெய்வ வழிபாடு உங்களுக்கு உதவியாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் வரலாம். இன்று காலை நேரத்தில் கவலையாக இருந்தவர்கள் மாலை நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.