12 ராசியினரில் யாருக்கு ரொம்ப லக்கு தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

திட்டமிட்ட காரியங்களில்  திடீரென மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள். உடல்நலனில் அக்கறை தேவை. சுபகாரியங்கள் நடைபெறும்.

ரிஷப ராசி நேயர்களே...!

எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலைச்சல் சற்று அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே..! 

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு தகவல் வந்து சேரும்.பிள்ளைகள் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கடக ராசி நேயர்களே...!

உங்களது மதிப்பும் மரியாதையும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். காலை நேரத்தில் நல்ல செய்தி வந்து இருக்கும். அரைகுறையாக இருந்த கட்டுமான பணிகள் முடிவுக்கு வரும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

சிம்மராசி நேயர்களே...!

பெருமானை வழிபட்டால் உங்களுக்கு வாழ்க்கையில் மேன்மேலும் பல உயர்வு கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். சொத்து தொடர்பாக அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே....!

முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். வேலை மாற்றம் குறித்த சிந்தனை மேலோங்கும். நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிட வேண்டி வரலாம். ஆரோக்கியத்தில் சிறுசிறு சறுக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி நேயர்களே...!

நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். ஆடை ஆபரண அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள் நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். 

விருச்சிக ராசி நேயர்களே...!

நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வருவார்கள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும். வாகனம் வாங்க முற்படுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

புதிய தொழில் நுட்பத்தால் மகத்தான வேலையை செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

மகர ராசி நேயர்களே...!

அலைபேசி மூலமாக ஒரு முக்கிய தகவல் வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும். உடனிருப்பவர்கள் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

மகா விஷ்ணுவை வழிபட்டு மகிழ்ச்சி அடைய வேண்டிய நாள். இரவு பகல் பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள்.

மீனராசி நேயர்களே...!

திருமாலை வழிபாட்டால் திருப்தியாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். இல்லத்தரசிகளை ஒத்துழைப்போடு பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு இருக்கும்