12 ராசியினரில் பாராட்டும் புகழும் யாருக்கு வந்து சேரும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். இது வீடு வாங்கும் முயற்சி எடுப்பீர்கள். புதிய தொழில் தொடங்க சிந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. 

ரிஷப ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு லாபாகரமான நாளாக அமையும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த  நாள் உங்களுக்கு நன்மை பயக்கும் நாளாக அமையும்.

மிதுன ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியத்தை விரைந்து முடிக்க முற்படுவீரர்கள்.  வீட்டு பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற முற்படுவீர்கள்.

கடக ராசி நேயர்களே..!

பக்குவமாக நடந்து கொண்டு அனைவரின் பாராட்டை பெற்று விடுவீர்கள். உங்கள் உதவி கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்வீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

தொழில் ரீதியாக அவ்வப்போது மறைமுக போட்டிகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்வது. அலைச்சலுக்கு ஏற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

விலகிச் சென்றவர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். பல வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணை வழியே உங்களுக்கு நன்மை பயக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும். தொழில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி நேயர்களே...!

உங்களுடைய அந்தஸ்து நாளுக்கு நாள் உயிரும். அடுத்த நாளுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். பயணம் பலன் தரும். புதிய யுக்தியை கையாண்டு கடனை அடைப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு நன்மை கிடைக்கும் நாள். நாடாளும் நபர்களிடம் நட்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட நேரிடலாம். சுபகாரியங்கள் நடைபெறும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

நல்ல செய்தி உங்கள் இல்லம் தேடி வரும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்க முற்படுவீர்கள். பெற்றோர் வழியில் உங்களுக்கு அன்பு அரவணைப்பு அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

மகர ராசி நேயர்களே...!

 மறக்க முடியாத சம்பவம் இன்று நடக்கலாம். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கக்கூடிய நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொண்டு அதற்கேற்றவாறு உழைப்பீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

பணம் தாராளமாக வந்து சேரும். உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த தடைகள் அகலும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். பொதுவாழ்வில் ஈடுபடுவீர்கள். விலகிச் சென்றவர்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள்.

மீனராசி நேயர்களே...!

பாராட்டும் புகழும் அதிகரிக்கும். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் மேற்கொள்வீர்கள்.