12 ராசி நேயர்களும் தெரிந்துக்கொள்ள வேண்டியது இதுதான்.!

மேஷ ராசி நேயர்களே...!

உங்களைத் தேடி பல வாய்ப்புகள் வரும். மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். மொத்தத்தில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

நண்பர்கள் உங்களுக்கு நம்பிக்கை கொடுத்து நல்வழிப்படுத்துவதுவார்கள்.  வெளிநாட்டு தொடர்பு உங்களுக்கு நன்மை தரும். வீடுகட்டும் சிந்தனை நாளுக்கு நாள் அதிகரிக்கும். திருமணம் குறித்த பேச்சுவார்த்தை ஏற்படும்.

மிதுன ராசி நேயர்களே...!

நேற்றைய பிரச்சனையில் முடிவுக்கு கொண்டு வருவீர்கள். உயர் அதிகாரிகளின் உதவி உங்களுக்கு எப்போதும் உண்டு. உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்க மாற்று மருந்தை மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

மற்றவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து நேரத்தை வீணாக்காமல் இருப்பது நல்லது. வளர்ச்சி குறித்து சிந்திப்பீர்கள். வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது கூடுதல் நன்மை பயக்கும். அவ்வப்போது மனக்குழப்பங்கள் வரும்.எதற்கும் பயப்படவேண்டாம்.

சிம்மராசி நேயர்களே..! 

பெரிய பெரிய மனிதர்களை சந்திப்பதன் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்கால நலன்கருதி சேமிப்பில் தொடங்குவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வரும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. எதிர்பார்த்த அளவுக்கு வரவு இருக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

அன்பு நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அதிகாலையிலேயே நல்ல செய்தி வந்து சேரும். வருமானம் திருப்தியாக இருக்கும்/ தொழில் தொடர்பாக முக்கிய நபர்களை சந்திக்க நேரிடலாம்

துலாம் ராசி நேயர்களே...!

பக்கபலமாக விளங்கும் நண்பர்களால் பணியில் இருக்கும் தொய்வு குறைந்துவிடும். நிச்சயித்த காரியம் நடைபெறும். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களை தேடி வரும். பல தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

பொதுவாழ்வில் உங்களது புகழ் நாளுக்கு நாள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் திருப்தியாக இருக்கும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும். ஆன்மிக பணியில் ஆர்வம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான செய்தி வந்து சேரக்கூடிய நாள்.

தனுசு ராசி நேயர்களே..!

முன்னேற்றம் அதிகரிக்கும். முக்கிய புள்ளிகள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். பொருளாதார நலன் கருதி வெளியூர் செல்ல நேரிடலாம். சுற்றி இருப்பவர்களை அனுசரித்து இருப்பது நல்லது.

மகர ராசி நேயர்களே...!

தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

கும்பராசி நேயர்களே...!

சிக்கல்கள் விலகி நன்மை பயக்கும் நாள். உங்களுக்கு பிடித்த நண்பரை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உங்களுக்கு அதிகரிக்கும். அலுவலக பணிகளை சரியாக செய்துகொள்வது  நல்லது 

மீனராசி நேயர்களே...!

இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். அந்நிய தேசத்திலிருந்து வரும் நல்ல தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.