12 ராசியினரின் நிலைமை இதுதான்...! உங்களுக்கு இன்று எப்படி இருக்கும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

நீண்ட நாட்களாக நடைபெற்று இருந்த காரியம் தற்போது முடிவுக்கு வரும். சொந்த பந்தங்களுக்கு மத்தியில் உங்களது மதிப்பு உயரும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

சில காரியங்களை போராடி ஜெயிக்க வேண்டிய நிலைமை வரும். அனாவசியமாக யாருக்காகவும் எந்த ஒரு உறுதிமொழியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி உணவுகளைத் தவிருங்கள். இல்லையேல் உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது 

மிதுன ராசி நேயர்களே...!

மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

கடக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். புதிய புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள். கடன் பிரச்சினைகளுக்கு மாற்று வழி ஏற்படும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

உங்களுக்கு பிடித்த ஒருவரை சந்திப்பீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். அரசியல்வாதிகளுடன் உங்களது நட்பு அதிகரிக்கும்.

கன்னி ராசி நேயர்களே....!

தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு திருப்தியாக இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே....!

மனதில் பட்டதை பளிச்சென பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

சொன்ன சொல்லை காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்கு பிடித்தவர்களுக்காக  அதிக செலவு செய்ய நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

தனுசு ராசி நேயர்களே...!

பழைய நினைவுகளில் அடிக்கடி சென்றுவருவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் உங்களது நட்பு அதிகரிக்கும்.

மகர ராசி நேயர்களே...!

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீரென உறவினர்கள் வருகை தருவார்கள். கனவுத் தொல்லை, தூக்கமின்மை இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிக்க கூடிய திறன் கொண்டவர்கள் நீங்கள். பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என நினைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீனராசி நேயர்களே...!

வீண் செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். உங்களுடைய பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பழைய நண்பர் ஒருவரை எதிர்பாராமல் சந்திப்பீர்கள்.