12 ராசியினரில் யாருக்கெல்லாம் பிசினஸ் வாய்ப்பு அதிகம்..? 

மேஷ ராசி நேயர்களே...!

உங்களுடைய முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நண்பர்களின் தொந்தரவு சற்று குறையத் தொடங்கும். நீங்கள் எடுத்து வைக்கும் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

அலுவலக பணிகளில் மறதி அதிகரிக்கும். நீங்கள் அதிகமாக நேசித்த ஒருவர் உங்களிடம் கோபமாக நடந்து கொள்ள வேண்டி வரலாம். 

மிதுன ராசி நேயர்களே...!

காலையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.மாலையில் சற்று நிம்மதி குறைய வாய்ப்பு உண்டு. வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவி செய்வார்.

கடகராசி நேயர்களே...! 

நீங்கள் மேற்கொண்ட முயற்சி வீணாகாது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்கி முடிப்பீர்கள். தொல்லை தந்தவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள்.

சிம்மராசி நேயர்களே...! 

நிதிநிலை அதிகரிக்கும்.நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். பொது காரியங்களில் ஈடுபட்டு புகழ் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே....!

இன்று உங்களுக்கு யோகமான நாள். தாய்வழியில் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சம்பள பாக்கிகள் வந்து சேரும். சுபகாரிய பேச்சு பேச நேரிடலாம்.

துலாம் ராசி நேயர்களே...!

வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர வகையில் உங்களுக்கு ஒற்றுமை கிடைக்கும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

விருச்சிக ராசி நேயர்களே...!

பிரபலங்களில் சந்திப்பால் உங்களுக்கு பெருமை கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு வந்து சேரும். தொலைபேசி வழித் தகவல் நன்மையை பயக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

எதிர்பாராத சிலரின் சந்திப்பால், உங்களுக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல விஷயங்களை அடைவீர்கள். தொழில் தொடர்பாக அலைச்சல் வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

செலவு அதிகரிக்கும். வீண் பிடிவாதம் இருக்கக்கூடாது. திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். நண்பர்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கும்ப ராசி நேயர்களே...!

மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய பொருளாதார நிலை அதிகரிக்கும். நண்பர்கள் உதவி செய்ய முன் வருவார்கள். கலைத் துறையில் அதிக ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

மீனராசி நேயர்களே...!

நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இல்லத்தில் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். பொது வாழ்க்கையில் புகழோடு வாழ்வீர்கள். நினைத்த காரியம் ஒன்று நிறைவேறும்.