12 ராசியினரில் யாருக்கு யோகமான நாள் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கையோடு நடந்துக் கொள்ளும் நாள். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரபல மாணவர்களை சந்தித்து பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

மனநிறைவு நிறைந்து இருப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீங்கள் தேடிச் சென்ற நபர் உங்களை தேடி வந்து நல்ல செய்தியை கொடுப்பார்.வெளிநாட்டில் இருந்து ஒரு நல்ல செய்தி உங்களை தேடி வரும்.

மிதுன ராசி நேயர்களே...!

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வழக்கமாக செய்யும் பணிகளில் இன்று மாற்றங்களை எதிர்பார்க்கலாம். செலவுகள் அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே...!

தொட்ட காரியம் நிறைவேறும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட நேரலாம்.  கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் உங்கள் உதவி நாடி வீட்டிற்கு வருவார்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

எதிரிகளின் பலம் அதிகரிக்கும். எனவே சற்று உஷாராக இருப்பது நல்லது. உங்கள் வேலையில் மும்முரமாக இருங்கள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். துன்பங்களை தவிர்த்துவிடலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

கனவுகள் நனவாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வரலாம் 

துலாம் ராசி நேயர்களே...!

தொலைபேசி வாயிலாக ஒரு நல்ல செய்தி வந்து சேரும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். 

விருச்சிக ராசி நேயர்களே...!

மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய நண்பர்களை அறிமுகமாவார்கள். பொருளாதாரம் உயரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இடம் வாங்க விற்க ஒரு முயற்சியை மேற்கொள்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

சவால்களைச் சமாளிப்பீர்கள். தன்னம்பிக்கையோடு ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. மனதளவில் நிம்மதியாக இருப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வருங்கால நலன்கருதி முடிவெடுப்பீர்கள். வங்கி சேமிப்பு உயர்த்த திட்டமிடுவீர்கள்.
குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும்.

மீன ராசி நேயர்களே...!

அனுசரித்து செல்வதன் மூலம் உங்களுக்கு பொருளாதாரம் உயரும். குடும்ப சுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வரலாம். வாயை சற்று அடக்கி பேசுவது நல்லது