12 ராசியினருக்கும் இதுதான் நிலைமை..! யாருக்கு அதிக செலவு ஏற்படும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

கவலைகள் தீர ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வரவு செலவு திருப்தியாக இருக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உறவினர்களால் தொல்லை அதிகரிக்கும். எதையும் பல முறை யோசித்து முடிவெடுக்க வேண்டியது நல்லது.

மிதுன ராசி நேயர்களே...!

விடியும் பொழுது நல்ல செய்தி உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத்தில் உங்கள் மரியாதை உயரும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். 

கடக ராசி நேயர்களே...!

வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். எதிர்காலம் இனிமையாக அமைய வாய்ப்பு உண்டு. நிலையான வருமானத்திற்கு வழி வகை செய்து கொள்வீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் .உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு வருவார்கள் பக்குவமாக பேசி பல காரியங்களை செய்து காட்டுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். செய்யும் தொழிலில் உயர்வு கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

பயணத்தால் பலன் கிடைக்கும். பணி நிரந்தரம் பற்றிய தகவல் உங்களுக்கு வந்தடையும். பழைய சம்பவங்களை அசை போட்டு சிந்திப்பீர்கள். உடல்நலனில் அக்கறை தேவைப்படும்.

விருச்சக ராசி நேயர்களே...!

வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். வங்கிகளில் சேமிப்பு அதிகரிக்கும்
அலைபேசி வழியில் ஓர் நல்ல செய்தி உங்களை வந்தடையும்.

தனுசு ராசி நேயர்களே...!

அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வது நல்லது. அதிகாலையில் நல்ல தகவல் வரும். பொது வாழ்வில் புகழ் அதிகரிக்கும். வேலை மாற்றம் குறித்த சிந்தனை செய்வீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

நினைத்ததை முடித்து காட்டும் நாள் என்று அலைபேசி வழியில் ஆச்சரியமான தகவல் ஒன்று உங்களை வந்து சேரும் ஆடம்பரப் பொருட்களின் செயற்கை உயிர் ஆலய வழிபாடு மேற்கொள்வீர்கள்

கும்ப ராசி நேயர்களே..!

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தடைபட்ட காரியங்கள் விரைவாக முடிவுக்கு வரும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவார்கள். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மீனராசி நேயர்களே...!

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். கூடப்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும்.