12 ராசியினரில் யாருக்கெல்லாம் அதிக செலவு ஏற்படும் தெரியுமா..?
 
மேஷ ராசி நேயர்களே...!

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்க வேண்டிய நாள் இது.எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷப ராசி நேயர்களே..!

பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். புதியவர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். வரவும் செலவும் சமமாக இருக்கும். அடுத்தவர் நலனுக்காக எடுத்த முயற்சிகள் அலைச்சல் ஏற்படுத்தும்.  

மிதுன ராசி நேயர்களே...!

எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் கொடுக்கும் நாள். கடன் சுமை அதிகரிக்கும். அலுவலகங்களில் சற்று அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளின் வேலைவாய்ப்பு குறித்து யோசனை செய்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

நிர்வாகத் திறமை அதிகரிக்கும். நீண்டநாள் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நிகழ்வு நடைபெறும். பூர்வீக சொத்து தகராறுகள் நல்ல முடிவிற்கு வரும்.

சிம்ம ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு மிகவும் அருமையான நாள். எதிர்கால நலன் கருதி பல திட்டங்களை முன் கூட்டியே தீட்டுவீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். சொத்துக்கள் வாங்க முயற்சி செய்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். சகோதர வகையில் உங்களுக்கு சுபச்செலவுகள் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

துலாம் ராசி நேயர்களே...!

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

காலை நேரத்தில் நல்ல செய்தி வந்து சேரும். கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். வருமானம் திருப்தியாக இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

சேமிப்பு குறையக் கூடிய நாள் இது. சிறு சிறு பிரச்சினைகள் அவ்வப்போது வந்தாலும் கூட அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பொதுநலத்தில் ஈடுபடும் போது விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை.

மகர ராசி நேயர்களே...!

வருமானம் அதிகரிக்கக்கூடும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நீண்டதூரப் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பராசி நேயர்களே...!

மாற்று கருத்துடைய நபரால் உங்கள் மனம் மிகவும் கஷ்டப்படும். கடுமையான முயற்சிகள் மூலமாக பலனை அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

மீனராசி நேயர்களே...!

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட கூடிய நாள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். கடினமான வேலைகளை கூட நயமாக பேசி கச்சிதமாக முடித்துக் காட்டுவீர்கள்.