12 ராசியினரில் யாருக்கு அதிக செலவு ஏற்பட போகுது தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

தேசப்பற்று மிக்கவர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனாலும் மன நிம்மதியுடன் இருப்பீர்கள். தொழில் நலன் கருதி இன்று எடுக்கப்பட்ட ஒரு சில முயற்சி வெற்றி கொடுக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கலாம். கொள்கை பிடிப்போடு செயல்பட முயற்சி மேற்கொள்வேர்கள். வருமானம் திருப்தியாக இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

பிரச்சினைகள் அகலும் நாள். பெற்றோர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு நல்ல செய்தியை சொல்வார்கள். வாகனத்தை பராமரிக்கும் எண்ணம் உண்டாகும். உங்களது புத்திசாலியான செயல்பாட்டால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

பொருளாதார நிலை உயர கூடிய நாள். சகோதரர்கள் உங்களுக்கு உதவி செய்வார். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் முன்னெடுத்து செல்கிறார்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழக்கூடிய நாள். பழைய பாக்கிகள் வசூலாகும். தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக முடியும். ரகசியங்களை வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த காரியம் நடைபெறும் நாள். அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். பாராட்டுகள் பணம் வந்த மறுநிமிடமே செலவாகும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

நினைத்தது நிறைவேறும் நாள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். பூர்வீக சொத்துகளால் லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

பொறுமையைக் கடைப்பிடித்து பல சாதனைகளை செய்வீர்கள்.பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்களிடம் கோபமாக பேச வாய்ப்பு உண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வருமானம் சீராக இருக்கும்.