12 ராசியினரும் இதை  கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க..! 

மேஷ ராசி நேயர்களே...!

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். குடும்பத்தை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறும்.

ரிஷப ராசி நேயர்களே...!

சுப செய்திகள் வந்து சேரக்கூடிய நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். கூடப்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

புதிய முயற்சியில் வெற்றி அடைவீர்கள். புகழ் மிக்கவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தீர்கள்.

கடகராசி நேயர்களே...!

பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். ஒரு பக்கம் வந்தாலும் இன்னொரு பக்கம் செலவும் அதிகரிக்க நேரிடும்.

சிம்ம ராசி நேயர்களே...!

பிரச்சனைகளை மிக எளிதாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் சற்று தொல்லை ஏற்படும். வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் உங்களது நண்பர்கள் ஒரு சில எதிர்ப்பு விஷயங்களை செய்யலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். விரைவாக முடிக்க வேண்டும் என எண்ணிய சில வேலைகள் தாமதமாக முடிய வாய்ப்பு அதிகம். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனமாக இருப்பது நல்லது.

துலாம் ராசி நேயர்களே..!

வீடு, இடம் வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வேலை மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். ஒரு பக்கம் பணம் வர இன்னொரு பக்கம் செலவும் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

பாசம் மிக்கவர்கள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்ள முன்வருவார்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வகையிலும் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கடன்சுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பத்திரப்பதிவின் போது கவனமாக இருப்பது நல்லது.

மகர ராசி நேயர்களே...!

வியாபார போட்டிகளை சமாளித்து காட்டிய பிறகு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நடக்காது என நினைத்து இருந்த சில காரியங்கள் நடக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும் நாள். உடன்பிறந்தவர்கள் கொடுத்த வேலை உங்களிடம் வந்து சேரும். அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும்.

மீனராசி நேயர்களே...! 

முக்கிய பிரமுகர்களை சந்தித்து முடிவெடுக்கும் நாள். புதிய வழியில் செல்ல முயற்சி மேற்கொண்டு கடனை சமாளிக்க முற்படுவீர்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.