12 ராசியினரில் யாரெல்லாம் புது திட்டம் போடுவீர்கள் தெரியுமா..?

மேஷ ராசி நேயர்களே..!

நீங்கள் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். சகோதரர்களை நம்பி செய்த வேலை வெற்றியில் முடியும். கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. தொழில் வளர்ச்சிக்காக புதிய முயற்சியை மேற்கொள்ள வேண்டி வரலாம்.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்களை எதிர்த்தவர்கள் உங்களை விட்டு விலகும் நாள். இன்று விருந்தினர்கள் வருகையால் உங்களது வீட்டில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

இதுநாள் வரை கூடவே இருந்து தொல்லை கொடுத்து வந்த நண்பர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள புதிய புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். இன்று நன்மை நடக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே..!

புகழ் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியாத சூழல் ஏற்படலாம்.

சிம்மராசி நேயர்களே...!

மற்றவர்கள் பிரச்சினைகள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாற்று கருத்துடையோர் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்லவேண்டும். உறவினர்கள் சிலர் உங்களுக்கு எதிரி போன்று செயல்படுவார்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

உற்சாகமாக இருப்பீர்கள். உங்களைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் உங்களை விட்டு விலகி நிற்பார்கள். திடீரென சொத்து சேர்க்கை நடக்கலாம். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

அக்கறை செலுத்தாத ஒரு சில விஷயங்களில் கூட உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்பது குறித்து ஆலோசனை செய்வீர்கள்.  உத்தியோகத்தில் சோதனைகள் வரும்.  பணம் வந்த மறுநிமிடமே செலவாகும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை சுமுகமாக முடியும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற முற்படுவீர்கள். விஐபிக்கள் உங்களை தேடி வருவார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வதை தவிர்த்து நடக்க வேண்டிய காரியத்தை பாருங்கள். உங்களை சுற்றி பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். விலை உயர்ந்த பொருட்களை விற்று வீடு மாற்றம் குறித்த சிந்தனை மேலோங்க வாய்ப்பு உள்ளது.

மகர ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க வாய்ப்பு உண்டாகும். விலகிச் சென்றவர்கள் உங்களிடம் விரும்பி வந்து பேசுவார்கள். கல்யாண முயற்சி எடுப்பீர்கள்.

கும்பராசி நேயர்களே...!

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வருமானம் பெருக என்ன வழி என யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் நிரந்தர வேலை பற்றிய தகவல் உங்களுக்கு வரலாம்.

மீனராசி நேயர்களே...!

சேமிப்பு கரையும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் செய்ய நேரிடும். நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பழிகள் ஏற்படாமலிருக்க பணிபுரிபவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.