12 ராசியினருக்கும்  சில முக்கிய செய்தி இதோ..!

மேஷ ராசி நேயர்களே...!

பயணிக்கும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. விஐபிக்களிடம்  குறைந்த அளவில் பேசுங்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் சூழல் உருவாகும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

ஆடம்பர செலவுகளை குறைப்பது சிறந்தது. நீண்டநாளாக திட்டமிட்ட ஒரு முக்கிய புண்ணிய ஸ்தலத்திற்கு சென்று வழிபடுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

எதிர்பாராத பொருள் வரவு உங்களுக்கு கிடைக்கும். பணவரவு தேவையான நேரத்தில் உங்களை வந்தடையும். உங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியூர் செல்வீர்கள். வீடு வாகனம் சம்பந்தப்பட்ட செலவுகள் ஏற்படலாம். மன உளைச்சல் அவ்வப்போது வந்து நீங்கும்.

கடகராசி நேயர்களே...!

உங்களிடம் மறைந்து கிடக்கும் பல திறமைகள் வெளிப்படும் நாள். காரியத் தடை விலகும். எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் கல்வி குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

சிம்மராசி நேயர்களே..!

புது பொலிவுடன் காணப்படுவீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் பணப்பற்றாக்குறை தீரும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

கன்னி ராசி நேயர்களே...!

உணவில் கட்டுப்பாடு அவசியம். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வீடு வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கக் கூடும். யாரிடமும் வீண் பேச்சு வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம் ராசி நேயர்களே...!

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பும் அதனால் உங்களுக்கு உதவியும்  கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி உங்களை வந்தடையும்.

தனுசு ராசி நேயர்களே...!

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு பிறக்கும். பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் நீங்கும்.

மகர ராசி நேயர்களே...!

உங்கள் செயலில் வேகம் அதிகரிக்க கூடும். எதிர்பார்த்த பண புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ற பெரிய வீட்டிற்கு செல்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மன நிறைவு உண்டாகும்.

கும்ப ராசி நேயர்களே...!

கடினமான காரியங்களையும் மிகவும் எளிதாகச் செய்து முடித்து விடுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பால் ஆதாயம் கிடைக்கும். தடைபட்டிருந்த சில பணிகள் விரைவாக செய்து முடிப்பீர்கள்.

மீனராசி நேயர்களே...!

எதிர்பார்த்திருந்த பணம் உங்கள் கைக்கு கிடைக்கும். நீங்கும் கம்பீரமாக பேசி பல வேலைகளை எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்தது போலவே நல்ல செய்தி வந்தடையும். யோகாவில் ஈடுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு.