12 ராசியினருக்கும் இன்று அமைதியாக இந்த விஷயத்தை கேட்டுக்கோங்க..! 

மேஷ ராசி நேயர்களே...!

இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய சில காரியங்களில் வெற்றி அடைவீர்கள். பணத்தேவை எளிதாக பூர்த்தி அடையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷப ராசி நேயர்களே...!

எண்ணங்கள் நிறைவேறும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

இன்று உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள் வீடு தேடி வருவார்கள்.

கடக ராசி நேயர்களே...!

மனக்குழப்பம் அதிகரிக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். உடல்நலத்தில் அக்கறை வேண்டும். அமைதி கிடைக்க கோவிலுக்கு செல்வீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

நல்லவர்களை சந்தித்து நலம் விசாரியுங்கள். தொழில் வளர்ச்சிக்கு முன் பின் தெரியாதவர்கள் கூட உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

தடைகளும் தாமதங்களும் அதிகரிக்கும் நாள். உங்கள்  நண்பருடன் பிரச்சினை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ கூடிய நாள்.

துலாம் ராசி நேயர்களே...!

பணி நிரந்தரம் பற்றிய தகவல் உங்களுக்கு வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிவாலய வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிக ராசி நேயர்களே...!

ஆன்மீகம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே..!

வம்பு வழக்குகளை சமாளித்து காட்டுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முடிவு வெற்றி பெறும். அரைகுறையாக நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

வருமானம் இரண்டு மடங்காக உயரும். வாகனங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். உற்சாகத்தோடு காணப்படுகின்ற இறைவழிபாடு உங்களுக்கு நிம்மதியை கொடுக்கும். 

கும்ப ராசி நேயர்களே..! 

திருமண முயற்சி மேற்கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். 

மீனராசி நேயர்களே...!

சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் செலவு ஏற்படும். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.