12 ராசியினரில் அடக்கி வாசிக்க வேண்டிய ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். உறவினர் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காண்பிப்பார்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தாயின் உடல்நலம் சீராக இருக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

முக்கிய விஷயங்களில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே...!

உங்களுடைய உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். மற்றவர்களைப் பார்த்து அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என நினைக்காமல் உங்களுடைய தனித்தன்மையை என்றும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது நல்லது.

சிம்மராசி நேயர்களே...!

சுறுசுறுப்பாக செயல்படுவீரகள். உங்களுடைய சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். உங்களுக்கு பிடித்த கலை பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

எதிரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். கணவன் மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும். விருந்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பல்வேறு முக்கிய காரியங்களை நிகழ்த்தி காட்டுவீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு அதிகரிக்கும்.

விருச்சக ராசி நேயர்களே...!

கல்யாண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு வாங்குவது குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். குலதெய்வ பிரார்த்தனை செய்ய வேண்டியது அவசியம்.

மகர ராசி நேயர்களே...!

உங்களுடைய அனுபவத்தை பயன்படுத்தி பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வெளி வருவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வீர்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

குடும்பத்தில் திடீர் பிரச்சனை வந்து நீங்கும். யாரையும் மனம் கஷ்டப்படும் படி பேசாதீர்கள்.

மீன ராசி நேயர்களே...!

செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்வீர்கள்.