12 ராசியினரும் இன்று இப்படித்தான் இருக்க முடியுமாம்...!

மேஷ ராசி நேயர்களே...!

மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடி அமையும். தொழிலில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். 

ரிஷப ராசி நேயர்களே...!

சில விமர்சனங்கள் காயப்படுத்தும். ரகசியங்களை வெளியில் யாரிடம் செல்லாமல் இருப்பது நல்லது. திடீரென செலவுகள் ஏற்படலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களுக்கு பிடித்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள். திருமண தடை நீங்கி பேச்சுவார்த்தை தொடங்கும்.

கடக ராசி நேயர்களே...!

நட்பில் எந்த ஒரு விரிசலும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் நன்மை கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து உங்களிடம் பேசுவார்கள்.

சிம்மராசி நேயர்களே...!

வியாபார போட்டிகளை சமாளித்து காட்டுவீர்கள். வீடு வாங்கும் யோகம் அதிகரிக்கும். தொழில் சீராக இருக்கும். சில பிரச்சினைகள் வந்து போகலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இடம் வாங்க விற்க முயற்சி செய்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இனிய செய்தி வரும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

தக்க சமயத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லபடி முடியும். 

தனுசு ராசி நேயர்களே...!

உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பயணம் நல்ல ஒரு அனுபவத்தை கொடுக்கும்.

மகர ராசி நேயர்களே...!

பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். உடல்நலம் சீராக பார்த்துக்கொள்வது நல்லது. பயணத்தால் சில செலவுகள் ஏற்படும்.

கும்ப ராசி நேயர்களே...!

கொடுக்கல் வாங்கல் சீராக பார்த்துக்கொள்வது நல்லது. அதிரடியாக முடிவெடுத்து மற்றவர்களை ஆச்சர்யப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து நல்ல முடிவு எடுப்பீர்கள்.

மீனராசி நேயர்களே...!

அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொலைதூரப் பயணங்கள் செல்ல திட்டம் போடுவீர்கள்.