12 ராசியினரில் இன்று ஒரே குஜாலாக இருக்கக்போகும் ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

உங்கள் ரசனைக்கேற்ற வீடு இடம் வாங்க முற்படுவீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு கிடைக்கும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். 

ரிஷப ராசி நேயர்களே..!

இழுபறியாக இருந்து வந்த பல்வேறு வேலைகள் முடியும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

தொலைநோக்கு சிந்தனையுடன் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுவீர்கள். மனைவிவழியில் செல்வாக்கு அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கிடைக்கும்.

கடகராசி நேயர்களே...!

நெருப்பு சம்பந்தப்பட்ட இடங்களில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. சகோதரர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்ம ராசி நேயர்களே...!

உங்களது இலக்கில் கவனமாக இருப்பீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் அறிமுகம் உங்களுக்கு எளிதாக கிடைக்கும். குடும்பத்தில் உங்களது கை எப்போதும் ஓங்கியிருக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். 

கன்னி ராசி நேயர்களே...!

சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.. தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்க முற்படுவீர்கள். அரசாங்க விஷயம் சார்ந்த ஒரு நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

உறவினர் மற்றும் நண்பர்களுடன் இருந்துவந்த மோதல் நீங்கிவிடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை செய்வீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் சில நல்ல காரியங்கள் நிறைவேறும்.

விருச்சக ராசி நேயர்களே...!

மனப் போராட்டங்கள் அதிகரிக்கும். குழம்பிக் கொண்டிருந்த சில விஷயத்தில் தெளிவாக இருப்பீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற நினைப்பீர்கள். பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கை அதிகரிக்கும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். தங்க நகைகள் வாங்க திட்டமிடுவீர்கள். திடீரென ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அதனை தூக்கி போடுவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதைக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களால் உங்களுக்கு நன்மை உண்டு. 

கும்ப ராசி நேயர்களே...!

வீடு மனை வாங்குவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகலாம். பழைய கடனைத் தீர்ப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மீனராசி நேயர்களே...!

சின்ன சின்ன விஷயங்களை கூட பலமுறை போராடி முடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவதை அடக்கிக் கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்லுங்கள்.