12 ராசியினரில் இன்று பந்தாவாக இருக்க போவது யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..! 

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக வளர்க்க வேண்டும் என சிந்திப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பழைய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

சாதுர்யமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் அகலும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கடக ராசி நேயர்களே...!

சவால்கள் மற்றும் ஏமாற்றங்களை தாண்டி வெற்றி பெறக்கூடிய நிலை உருவாகும். நீண்டகால கடனை பைசல் செய்வது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே....!

வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களுக்கு வரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய சில முடிவுகளை எடுக்கக் கூடிய நிலை ஏற்படும். உடன் பிறந்தவர்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த பல தொல்லைகள் நீங்கி விடும். பழைய நண்பரை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...! 

எப்போதும் உங்களுக்கு ஒரு விதமான படபடப்பு இருக்கும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து போகும். தாழ்வு மனப்பான்மை அவ்வப்போது வந்தாலும் ஓங்கி நிற்பீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

விருச்சிக ராசி நேயர்களே...!

யாரையும் அனாவசியமாக பகைத்துக் கொள்ள வேண்டாம். சகோதரர் வகையில் மனக்கசப்பு வரும். எடுத்த காரியங்கள் முடிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.உடல்நிலை சீராக இருக்கும்.

மகர ராசி நேயர்களே...!

தடைப்பட்டு வந்த சில காரியங்கள் இன்று முடிவுக்கு வரும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களது நடவடிக்கையில் புத்திசாலித்தனம் தெரியும்.

கும்ப ராசி நேயர்களே...!

வீண் செலவுகளை தவிர்த்து விடுவது நல்லது. பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

மீன ராசி நேயர்களே...!

எந்த காரியத்தை தொட்டாலும் பலமுறை முயன்று செய்ய வேண்டிய நிலை ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.