12 ராசியினரில் பட்டைய கிளப்பும் ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்க கூடிய நிலை ஏற்படும். அரசு தொடர்பான சில காரியங்கள் உங்களுக்கு நிறைவடையும்.

ரிஷப ராசி நேயர்களே...!

சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்பு அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் மரியாதை உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

பண வரவு திருப்தியாக இருக்கும். இருந்தாலும் சேமித்து வைக்க மிகவும் கடின படுவீர்கள். சகோதர வகையில் மன நிம்மதி அடையும். விருந்தினர் வருகையால் வீடு ஜொலிக்கும்.

கடக ராசி நேயர்களே...!

தொட்ட வேலை மிகச் சிறப்பாக முழுமை அடையும். புது வாகனம் ஆபரணங்கள் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள். வெளிநாடு செல்ல விசா மிக எளிதாக கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

சிம்ம ராசி நேயர்களே..! 

சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். உடல்நிலையில் அக்கறை தேவை. உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கன்னி ராசி நேயர்களே..!

சில நாட்களாக விலகி இருந்த நண்பர்கள் உறவினர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்டபடி பயணங்கள் அமையும்.

துலாம் ராசி நேயர்களே...!

பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வராது என நினைத்திருந்த தொகை உங்களுக்கு கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் கட்டாயம் உண்டு. வாகனச் செலவு வைக்கும்.

விருச்சக ராசி நேயர்களே..!

சம்பவங்களை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். திடீரென உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வரலாம்.

தனுசு ராசி நேயர்களே...!

எதிர்பார்த்து காத்திருந்த தொகை உங்களை தேடி வரும். பிள்ளைகள் ஆறுதலாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு நல்ல செய்தி வந்தடையும்.

மகர ராசி நேயர்களே...!

ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை அவ்வப்போது வந்து நீங்கும். யோகா தியானம் செய்வது மிகவும் நல்லது. 

கும்ப ராசி நேயர்களே...!

உங்கள் முன்னேற்றத்திற்கு எத்தனை தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திடீரென அதிகரிக்க நேரிடும்.

மீனராசி நேயர்களே...!

தோற்றப்பொலிவு அதிகரித்து புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். உங்களின் ஆளுமைத்திறன் நாளுக்கு நாள் அதிகரிக்கும். சவாலான காரியங்களை சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டும் திறமை கொண்ட மீனராசி நேயர்களே பொதுமக்கள் மத்தியில் தனி சிறப்பை கொண்டு காணப்படுவார்கள்.