12 ராசியினரில் இன்று ஒய்யாரமாக இருப்பவர்கள் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

வீண் சந்தேகங்கள் வந்து போகும். வாகனப் பழுதை நீக்குவீர்கள். பணவரவு எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்களுடைய சாமர்த்தியமான பேச்சால் பல சாதனைகளைப் புரிவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள். சகோதரர்களுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த சில காரியங்கள் இனிதே நிறைவேறும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகராசி நேயர்களே...!

புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வருங்காலத்தைப் பற்றிய யோசனையில் அவ்வப்போது மூழ்குவீர்கள். பிரபலங்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே...!

குடும்ப வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் திடீரென முடிவுக்கு வரும். பிரபலமானவர்களின் தொடர்பு உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

விருந்தினர் வருகையால் வீட்டில் கல கலப்பாக மாறும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் மறைந்துவிடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களுக்கு வரும். பண வரவு அதிகரிக்கும்.

விருச்சிக ராசிகள்..!

திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. 

தனுசு ராசி நேயர்களே...!

பணவரவு அதிகரிக்கும். அடுத்தடுத்த செலவுகளால் என்ன செய்வது என்று தெரியாமல் சற்று யோசனை செய்வீர்கள். எந்த வேலையையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். 

மகர ராசி நேயர்களே...!

தைரியம் புகழ் கௌரவம் உங்களுக்கு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

கும்ப ராசி நேயர்களே...!

உங்களை தவறாக உணர்ந்து கொண்டவர்கள் தற்போது உங்களை நாடி வருவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனராசி நேயர்களே...!

பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. வீட்டை விரிவுபடுத்த முற்படுவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.