12 ராசியினரில் யாருக்கு புதிய ஒப்பந்தம் கைக்கு வர வாய்ப்பு உள்ளது தெரியுமா..?

மேஷ ராசி நேயர்களே...!

வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. கடன்சுமை அதிகரித்தாலும் அதனை எளிதாக சமாளித்து காட்டுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

மற்றவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டிய நாள். சுதந்திரமாக செயல்படுவதை காட்டிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வந்தாலும் சற்று தள்ளி வைக்கலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து கொடுப்பார்கள். பல புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வர வாய்ப்பு ஏற்படும். பழைய நண்பர் ஒருவர் உங்களை தேடி வருவார்.

கடக ராசி நேயர்களே...!

கொடுக்கல் வாங்கல் எப்போதும் சீராக இருக்கும். வீடு இடம் வாங்கும் முயற்சி செய்வீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். பணவரவு போதுமானதாக இருக்கும். நண்பர்கள் உங்களை நம்பி முதலீடு செய்ய முன்வருவார்கள். பிள்ளைகளால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க நேரிடலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

இடமாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். பாதியில் நின்ற வேலை மீண்டும் தொடங்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். அரசியலில் அதிக ஈடுபாடு அதிகரிக்கும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை செய்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சக ராசி நேயர்களே..!

புதிய ஒப்பந்தங்கள் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மற்றவர்களுடன் விட்டுக்கொடுத்து பேசுவது நல்லது. புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே..!

வாகனம் வாங்கும் முயற்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பெரியவர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மெல்ல மெல்ல குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க உற்சாகமாக காணப்படுவீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

உங்களுக்கு தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்தடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கலாம். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் குறையும்.

கும்ப ராசி நேயர்களே...!

நேற்றைய பிரச்சினை இன்று உங்களுக்கு ஒரு நல்ல முடிவை தரும். நினைத்த காரியம் நிறைவேறும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம் 

மீன ராசி  நேயர்களே..! 

இதுநாள் வரை இருந்து வந்த தடைகள் அகலும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.