மேஷ ராசி நேயர்களே..! 

திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். தன்னம்பிக்கையோடு பணிபுரியும் நாள். பிரபலமானவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும்.பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

உயரதிகாரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வழக்கமாக செய்யும் பணிகளில் இன்று சில மாற்றங்களை செய்ய நேரிடலாம். சகோதரர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

பணத்தட்டுப்பாடு நீங்கும் நாள். நீங்கள் தேடி சென்ற நபர் தானே வந்து உங்களைப் பார்த்து பேசுவார். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி உங்களுக்கு வரலாம்.

கடக ராசி நேயர்களே...!

தொட்டது மிக சிறப்பாக நடக்கும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டிய நிலை ஏற்படும். கொடுத்த வாக்கை எப்படியாவது நிறைவேற்ற பாடுபடுவீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். குடும்ப சுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக வைத்துக் கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

கன்னி ராசி நேயர்களே...!

பால்ய நண்பர்களின் சந்திப்பால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன்மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும்.

துலாம் ராசி நேயர்களே...!

போன் மூலம் பொன்னான தகவல் உங்களுக்கு வந்து சேரும். நண்பர்களால் ஏற்பட்ட மனக்கசப்பு மாறிவிடும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம் என்ற சிந்தனை மேலோங்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு உயரம் நாள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வரவை பெருக்கிக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

மகர ராசி நேயர்களே...!

இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதியான சூழ்நிலை நிலவும். 

கும்ப ராசி நேயர்களே...!

வங்கி சேமிப்பு எண்ணம் மேலோங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தொழில் ரீதியாக உயர்வீர்கள்.

மீனராசி நேயர்களே...!

 உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திடீரென வெளியூர் செல்ல நேரிடலாம்.