12 ராசியினரில் வாகன மாற்றம் செய்யப்போகும் நிலை யாருக்கு வரும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழைய நண்பர்கள் மூலமாக புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய புள்ளிகளைச் சந்தித்து நல்ல முடிவு எடுப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

உறவினர் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தொலைபேசி வழித் தகவல் மனக்கசப்பை ஏற்படுத்தும்.

மிதுன ராசி நேயர்களே...!

பெரியவர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யும் எண்ணம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொதுநல ஈடுபாட்டால் உங்களது புகழ் உயரும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். பாதியில் நின்ற பணிகள் தொடர்வீர்கள். உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள் மீண்டும் உங்களை தேடி வருவார்கள். 

சிம்ம ராசி நேயர்களே...!

மதிப்பும் மரியாதையும் உயரும். பெரியவர்களின் வாழ்த்துக்களை பெற்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி பெறுவீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கி இருக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழக்கூடிய நாள். கூடுதல் லாபம் கிடைக்கும்.  உடல் நலம் சீராக இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நல்லவிதமாக நடைபெறும். புண்ணிய காரியங்களுக்காக சிறிது தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

சந்தோஷம் அதிகரிக்கும்.நண்பர்கள் மூலம் தொழில் வளர்ச்சியை பற்றி பேசுகிறீர்கள். ஆன்மீக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி அளிக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழக்கூடிய நாள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்யலாம். மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும்.

மகர ராசி நேயர்களே...!

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். இடம் விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்கள் அதிகரிக்கும்.

கும்பராசி நேயர்களே...!

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மீனராசி நேயர்களே...!

நம்பிக்கையுடன் நிதானமாக செயல்பட வேண்டியது நல்லது. பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படலாம்.