12 ராசியினரில் யாருக்கு பல வழிகளில் பணம் வர வாய்ப்பு உள்ளது தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு சுபச்செலவுகள் ஏற்படும். கட்டிட பணிகளை தொடர்ந்து செய்ய வழி பிறக்கும். தேவையான செலவுக்கு ஏற்ற பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள்.பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி நேயர்களே...! 

உங்களைத் தேடி ஒரு நல்ல செய்தி வரும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து தரும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். இடம் மனை வாங்க வாய்ப்பு ஏற்படும்.

மிதுன ராசி நேயர்களே...!

போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்க கூடிய நாள். புதிய நண்பர்களின் சந்திப்பால் நன்மை ஏற்படும். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

கடக ராசி நேயர்களே...!

உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நிறைவேற்றுவீர்கள். தொழிலுக்காக எடுத்த முயற்சி வீண்போகாது. நம்பிக்கையுடன் செயல்படக்கூடிய நாள்.

சிம்ம ராசி நேயர்களே...!

உங்களை தேடி நல்ல வாய்ப்புகள் வரும். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி வரும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.வியாபார நலன் கருதி வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களுடைய அந்தஸ்து நாளுக்கு நாள் உயரும். இட மாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும். பயணங்களின்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நேற்று தான் பெருமூச்சு விட்டோம்... அதற்குள் மளமளவென உயர்ந்து விட்ட தங்கம் விலை..!

துலாம் ராசி நேயர்களே...!

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நாள் பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும் தேடி செல்ல நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை

விருச்சக ராசி நேயர்களே...!

பாராட்டும் புகழும் அதிகரிக்கும் நாள். வெற்றி செய்திகள் உங்களை தேடி வரும். தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். முக்கிய நபர் உங்கள் வீட்டை தேடி வருவார்.

தனுசு ராசி நேயர்களே..!

பணப்பற்றாக்குறை அகலும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கம் நீங்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை.

மகர ராசி நேயர்களே..!

பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக பேசி பழகுவது நல்லது. நண்பர்கள் நம்பிக்கையாக நடந்து கொள்வார்கள். திருமண பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். உடல் நலத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு அகலும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வீண் செலவுகள் ஏற்படலாம்.

மீனராசி நேயர்களே...!

கடன் சுமை குறைய வாய்ப்பு உள்ளது. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வியக்கும் செய்தி வந்து சேரும். இன்று உங்களை சந்திக்கும் நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.