12 ராசியினரில் யாரிடம் வி.ஐ.பிக்கள் தேடி வந்து பேசுவார்கள் தெரியுமா..?

மேஷ ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு சுப செலவுகள் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கட்டிட பணியை செய்ய வேண்டிய சூழல் உருவாகும். தொழில் முன்னேற்றத்தை பற்றி யோசிப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

இதுநாள் வரை இருந்து வந்த தடைக்கற்கள்  படிக்கற்களாக மாறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். செய்யும் தொழிலில் அடுத்தகட்ட முயற்சி எடுப்பீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஓடோடி வந்து உதவி செய்வார்கள். சேமிப்பில் கொஞ்சம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். வீடு மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். பிரபலமானவர்கள் உங்களுக்கு ஒரு வகையில் செலவு வைப்பார்கள்.

கடக ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பணத்தேவைகள் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியத்தை எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு யோகமான நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வியாபார நலன் கருதி வெளியூர் செல்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு அந்தஸ்து அதிகரிக்கும் நாள். நண்பர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். பயணத்தின்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

துலாம் ராசி நேயர்களே...!

வீடு வாங்கும் முயற்சி கைகூடும். பணம் பழ பல வழிகளில் வரும். நீங்கள் தேடி செல்ல நினைத்த ஒருவர் உங்களை தேடி வந்து பேசுவார். தொழிலில் மாற்றம் வரும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

உங்களின் பாராட்டும் புகழும் அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். பல வெற்றி செய்திகள் உங்கள் காதுக்கு இனிமையைக் கொடுக்கும். விஐபிக்கள் வந்து உங்களுடன் பேசுவார்கள். உங்களது நட்பால் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு செல்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

பணப்பற்றாக்குறை மெல்ல மெல்ல அகலும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த தடை அகலும். உடல் நலன் சீராக வைத்துக்கொள்வது நல்லது.

மகர ராசி நேயர்களே...!

எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உடல்நலத்தில் சிறு சிறு பிரச்சனை வந்து சீராகும். உதவி செய்த சிலர் உங்களை விட்டு பிரிவார்கள். அவ்வப்போது மன குழப்பம் வந்து நீங்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

திருமணத்தடை அகலும் தொழிலில் எதிர்பார்த்தபடி அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு செல்வீர்கள். அனுபவம் மிக்கவர்கள் உங்களுக்கு ஆலோசனை கொடுப்பார்கள். நண்பர்கள் நம்பிக்கையுடன் உங்களுக்கு உதவி செய்வார்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

மீன ராசி நேயர்களே..!

அக்கம் பக்கத்து வீட்டாரின் பகை சற்று குறைய தொடங்கும். அடுத்தகட்ட முன்னேற்றம் அடைவீர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். நீங்கள் சந்திக்கும் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.