12 ராசியினரில்  யார் மற்றவர்களிடம் பணம் வாங்க நேரிடும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

இன்று உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள். சேமிப்பு பணம் கொஞ்சம் செலவழிக்க நேரிடலாம். அலைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...! 

காலை நேரத்தில் சந்தோஷமான செய்தி ஒன்று வந்து சேரும். தைரியமாக காணப்படுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொது வாழ்வில் நம்பிக்கை மற்றும் புகழ் அதிகரிக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

சற்று செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுற்றியிருப்பவர்களை எப்போதும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்டு முக்கிய முடிவை எடுங்கள்.  ஆரோக்கியத் தொல்லை நீங்கி விடும் 

கடகராசி நேயர்களே...!

வரவு-செலவு சமமாக இருக்கும். அயல்நாட்டு பயணம் மேற்கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். புதிய திட்டம் ஒன்றை மனதில் நினைப்பீர்கள்.அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

சொன்னதை செய்து காட்டும் நபர்கள் நீங்கள்.  மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொலைபேசியில் முக்கிய செய்தி வந்து சேரும்.

கன்னி ராசி நேயர்களே...!

அருகில் இருப்பவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.அரைகுறையாக இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். முன்னேற்ற பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். வெற்றி மேல் வெற்றி குவிப்பீர்கள் 

விருச்சிக ராசி நேயர்களே..! 

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து செல்லும். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் பணம் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே...!

 அரசியல்வாதிகளால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த குழப்பங்கள் நீங்கி வியாபாரம் வளர்ச்சி அடையும். உங்களுடைய வீட்டு மனை மூலம் 
ஆதாயமடைவீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். தொழில் முன்னேற்றம் வரும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய வீட்டை பராமரிப்பது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

கும்பராசி நேயர்களே..! 

நன்மைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பெரியவர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 
தொழில் முன்னேற்றம் அடைவீர்கள்.தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வரலாம்.

மீன ராசி நேயர்களே...!

உடன்பிறப்புகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள். பிரியமுடன் வந்து பேசுவார்கள். போட்டிகள் இருக்காது.தொழில் சீராக நடைபெறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.