12 ராசியினரில் வாகன செலவு இருக்கு ஏற்படும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...! 

கடினமான காரியங்களையும் சாதரணமாக செய்து முடித்து பிரபலங்களின் நட்பு கிடைக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். 

மிதுன ராசி நேயர்களே...!

வாழ்க்கையில் பல நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் வேலை வேகமாக நடக்கும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் எப்போதும் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

கடக ராசி நேயர்களே...!

உங்களுக்கு பிடித்த டிவி வாகனம் வாங்க நல்ல நேரம் பிறக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரலாம்.

சிம்ம ராசி நேயர்களே...!

குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிலும் தர்மசங்கடமான சூழல் உருவாகும். அனாவசிய செலவுகள் அவ்வப்போது வந்துபோகும்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிக்கொள்வீர்கள். நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

துலாம் ராசி நேயர்களே..!

எதிர்ப்புகள் அடங்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கவும் திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். வீடு வாங்குவது கட்டுவது போன்ற முயற்சிகள் மேற்கொள்வீர்கள். புது வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

மகர ராசி நேயர்களே...!

பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். தங்க நகை வாங்க வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் சிலரின் சுய ரூபத்தை தெரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகி இருப்பீர்கள். 

கும்ப ராசி நேயர்களே...!

மின் சாதனங்களை வாங்க முற்படுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை அறிந்து கொண்டு, அதற்கேற்றவாறு நடந்து கொள்வது நல்லது. வெளிநாட்டில் இருந்து ஓர் நல்ல செய்தி வரும். 

மீன ராசி நேயர்களே...!

ஏதோ ஒரு படபடப்பு இருக்கும். எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வரும்.
வீடு வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும்.